சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா

35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா. #Kaala #Rajinikanth

Update: 2018-06-07 09:18 GMT
சென்னை

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை மற்றும்  புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

இந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதே.போல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

சென்னையில் ரஜினியின் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள காலா படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.

 சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது.

1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்