சினிமா செய்திகள்
பட வாய்ப்புகளுக்காக‘மாடர்ன்’ ஆக மாறிய ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா மாடர்ன் உடையில் தனது படத்தை சமூக வலைத்தளத்தில் பரவவிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ஸ்ரீதிவ்யாவுக்கு கைநிறைய படங்கள் இருந்தன. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை என்று அவருடைய அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. அதன்பிறகு பெங்களூர் நாட்கள், ஈட்டி, பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ திற என்று ஓய்வில்லாமல்தான் இருந்தார்.

ஆனால் இப்போது ஒத்தைக் குதிரை என்ற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. முந்தைய படங்களில் பாவாடை தாவணி உடுத்தி கிராமத்து பெண்ணாகவே வந்தார். இதனால் அதே போன்ற கதாபாத்திரங்களுக்கு மட்டுமே ஸ்ரீதிவ்யா தகுதியானவர் என்ற பேச்சு நிலவியது. அவரை ஒப்பந்தம் செய்ய வரும் டைரக்டர்களும் கிராமத்து கதைகளுடனேயே வந்தனர்.

எனவே அந்த இமேஜை உடைக்க ஸ்ரீதிவ்யா மாடர்ன் உடையில் தனது புதிய தோற்றத்துடன் கூடிய படத்தை இப்போது சமூக வலைத்தளத்தில் பரவவிட்டுள்ளார். இதன்மூலம் நகரத்து கதையம்சம் உள்ள பட வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறார்.