சினிமா செய்திகள்
விஸ்வரூபம் - 2: டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #KamalHassan #Vishwaroopam2
சென்னை,

கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ல் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் ‘விஸ்வரூபம்’. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிரைலர்  வருகிற 11ம் தேதியன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்தி டிரைலரை நடிகர் அமீர் கானும், தெலுங்கு டிரைலரை ஜுனியர் என்.டி.ஆரும், தமிழில் ஸ்ருதிஹாசனும் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.