விஸ்வரூபம் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

கமல் நடித்த விஸ்வரூபம் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. #Vishwaroopam2

Update: 2018-06-11 12:02 GMT
சென்னை,

கடந்த 2013-ல் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் ‘விஸ்வரூபம்’. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிரைலர்  வருகிற 11ம் தேதியன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்தி டிரைலரை நடிகர் அமீர் கானும், தெலுங்கு டிரைலரை ஜுனியர் என்.டி.ஆரும், தமிழில் ஸ்ருதிஹாசனும் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் விஸ்வரூபம் - 2 தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  விஸ்வரூபம் - 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.  விஸ்வரூபம் 2 தமிழ் டிரைலரை ஸ்ருதிஹாசன் வெளியிட்டார். இந்தி டிரைலரை ஆமீர்கானும் தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். 

மேலும் செய்திகள்