சினிமா செய்திகள்
ஷாருக் கானுடன் சல்மான் கான் நடித்த ‘ஜீரோ’ படத்தின் டீஸர் வெளியீடு

ஷாருக் கானுடன் சல்மான் கான் நடித்த ‘ஜீரோ’ படத்தின் டீஸர் வெளியீடப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தி திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் நடித்துள்ள  நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டீஸர், ரம்ஜானை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக் கான் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள படம் ‘ஜீரோ’. கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, அபய் தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சல்மான் கான், தீபிகா படுகோனே, ஸ்ரீதேவி, ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஷ்மா கபூர், ஜுகி சாவ்லா, மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். 

ஹிமான்ஸு ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்துக்கு, மனு ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் 21ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.