சினிமா செய்திகள்
தமிழக சட்டமன்ற படத்துடன் “நாளைய முதல்வரே” என நடிகர் விஜய்யின் போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளைய முதல்வரே என்று நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ActorVijay
சென்னை,

நடிகர் விஜய், தனது 44வது  பிறந்தநாளை வரும் 22ஆம் தேதி கொண்டாடுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இருப்பினும், அவரின் ரசிகர்கள்,  நாளைய முதல்வரே என தமிழக சட்டமன்றப் படத்துடன் நெல்லையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.  

இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கூறுகையில்,

"நான் நேசிப்பது போல் ரசிகர்களும் விஜய்யை நேசிக்கின்றனர்". ரசிகர்கள் விஜய் மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடாக இந்த போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ரஜினி உட்பட பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர் வைத்துள்ளதாகவும் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.