சினிமா செய்திகள்
நடிகர் ஆர்யா தம்பி காதல் திருமணம்இந்து பெண்ணை மணக்கிறார்

நடிகர் ஆர்யாவின் தம்பியின் காதல் திருமணம் சென்னையில் 22-ந் தேதி நடக்கிறது. அவர் இந்து பெண்ணை மணக்கிறார்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன் இவன்,’ ‘மதராசபட்டினம்,’ ‘இரண்டாம் உலகம்,’ ‘வேட்டை’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவருடைய தம்பி ஷாகிர், ‘சத்யா’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, ‘புத்தகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘அமரகாவியம்’ படத்தில், கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்தார். அடுத்து, ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’ ஆகிய படங்களில், சத்யா நடித்தார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து சத்யாவுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.