சினிமா செய்திகள்
குருவியார் கேள்வி-பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ஜோதிகா கதை நாயகியாக நடிக்க, சூர்யா கதை நாயகனாக நடித்து, இயக்கினால் எப்படியிருக்கும்? (பி.ஜெய்கணேஷ், சென்னை–18)

சிறந்த நடிகரான சூர்யா, மிக திறமையான டைரக்டராகவும் பேசப்படுவார். படம், ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ அடிக்கும்!

***

கீர்த்தி சுரேசுக்கு அவருடைய சிரிப்பு அழகா? அல்லது அவருடைய ஒல்லியான உடற்கட்டு அழகா? எது அவருக்கு பேரழகு? (கே.பி.ஸ்ரீதர்ராஜன், பாலக்காடு)

கீர்த்தி சுரேசுக்கு சிரிப்பே அழகு என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அவரை பேரழகி பட்டியலில், உடன் நடிக்கும் கதாநாயகர்களே சேர்க்க மாட்டார்கள்!

***

குருவியாரே, நயன்தாரா உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிப்பாரா? (ஏ.கவின் செல்வராஜ், திண்டுக்கல்)

விக்னேஷ் சிவன் தயார் என்றால் நயன்தாராவும் ‘அதற்கு’ தயாராக இருக்கிறாராம்!

***

2 குழந்தைகளுக்கு தாயாகி விட்ட சிம்ரன், இன்னமும் இடையழகியாகவே இருக்கிறார் என்கிறார்களே...அது உண்மையா? (எல்.பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி)

அந்த இடையழகு இப்போது, ‘எடையழகு’ ஆகிவிட்டது. அதை குறைக்க சிம்ரனும் அதிதீவிர முயற்சிகள் செய்து வருகிறார்!

***

குருவியாரே, சூரி, யோகி பாபு ஆகிய இருவரில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்? (ப.தண்டபாணி, திருக்கோவிலூர்)

இரண்டு பேருமே நாள் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். சூரி, ஒருநாளைக்கு இரண்டரை லட்சமும், யோகி பாபு, ஒருநாளைக்கு 2 லட்சமும் வாங்குவதாக கேள்வி!

***

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன? அவர் என்ன வேடத்தில் நடிக்கிறார்? அந்த படத்தில் அவருக்கு ஜோடி யார், படத்தை இயக்குபவர் யார்? (கே.சி.பிரதாப், தஞ்சை)

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. அதில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, முகில் டைரக்டு செய்கிறார்!

***

குருவியாரே, நமீதா வீட்டில், ‘விசே‌ஷம்’ எதுவும் உண்டா? (சோ.அஸ்வின்குமார், அரக்கோணம்)

டி.ராஜேந்தர் படத்தில் நடிப்பதற்காக நமீதா தினமும் தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். ‘விசே‌ஷம்,’ இப்போதைக்கு இல்லையாம்!

***

ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் விடுதியில், எத்தனை பேர் வசித்து வருகிறார்கள்? (என்.ராமச்சந்திரன், சங்ககிரி)

ஆதரவற்றோர், முதியோர், உடல் ஊனமுற்றோர் என மொத்தம் 60 பேர் வசித்து வருகிறார்கள்!

***

குருவியாரே, பிரியா ஆனந்துக்கு தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லையே...அவர் என்ன செய்கிறார்? (சி.பி.ராஜ்காந்த், டி.கல்லுப்பட்டி)

கதாநாயகிகளைப் பொருத்தவரை ஒரு மொழி படத்தில் வாய்ப்பு இல்லையென்றால், இன்னொரு மொழி படத்துக்கு போய்விடுவார்கள். அதைத்தான் பிரியா ஆனந்தும் செய்து இருக்கிறார். அவர் இப்போது மலையாளம் மற்றும் கன்னட படங்களில், ‘பிஸி!’

***

பார்க்கிற ஆண்களை எல்லாம், ‘‘அண்ணா’’ என்று அழைக்கும் நிக்கி கல்ராணி, திருமணம் பற்றி யோசிக்கவே மாட்டாரா? (கே.சுஜி பாலகிருஷ்ணன், புதுச்சேரி)

‘‘சினிமாவில் நான் இப்போதுதான் சம்பாதிக்கவே ஆரம்பித்து இருக்கிறேன். அதற்குள் ஏன் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும்? எனக்கென்று ஒருவர் எங்கோ பிறந்து இருப்பார். அவர் என் கண்ணில் சிக்கும்போது நிச்சயமாக, ‘‘அண்ணா’’ என்று அழைக்க மாட்டேன். காதலுடன், ‘‘டார்லிங்’’ என்றே அழைப்பேன்’’ என்கிறார், நிக்கி கல்ராணி!

***

குருவியாரே, ஜேம்ஸ்பாண்ட் ஆக ஜெய்சங்கர் நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடிய படம் எது? (ப.மணி, நங்கநல்லூர்)

‘சி.ஐ.டி. சங்கர்!’

***

‘நகைச்சுவை நாயகி’ ஆகவும் நடித்துக் கொண்டிருக்கும் ஊர்வசி முதன்முதலாக எந்த கதாநாயகனுடன் ஜோடியாக நடித்தார்? (பி.ரவீந்தர் பிரபு, நாகர்கோவில்)

ஊர்வசியின் முதல் கதாநாயகர், கே.பாக்யராஜ். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் அவரை அறிமுகம் செய்தவர், இவர்தான்!

***

குருவியாரே, விஜயகாந்தும், சரத்குமாரும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் எது, அந்த படத்தை இயக்கியவர் யார்? (வி.தமிழரசன், தூத்துக்குடி)

விஜயகாந்தும், சரத்குமாரும் முதன்முதலாக இணைந்து நடித்த படம், ‘புலன் விசாரணை.’ அந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார்!

***

‘நதிகள் இணைப்பு’ திட்டம் பற்றி யாராவது படம் எடுப்பார்களா? (டி.தேன்ராஜ், காட்பாடி)

துணிச்சல் மிகுந்த ஒருவரால்தான், ‘நதிகள் இணைப்பு’ திட்டம் பற்றி படம் எடுக்க முடியும்!

***

குருவியாரே, நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகிய 4 பேரில் யாருக்கு முதலில் டும்...டும்...? (ஆர்.ஜனா, உசிலம்பட்டி)

அனுஷ்காதான் முந்துவார். அவருக்கு மணமகன் தேர்வு செய்யப்பட்டு விட்டார். விரைவில் அவருடைய பெயர்–விவரம் தெரியவரும்!

***

சண்முக பாண்டியனுடன் விஜயகாந்த் நடிக்க வாய்ப்பு உண்டா? (வே.கவுதம், முகப்பேர்)

விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர் பூரண நலம் பெற்று திரும்பி வந்தபின், மகன் சண்முக பாண்டியனுடன் நடிப்பாராம்!

***

குருவியாரே, விஷால் நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்று வசூல் சாதனை செய்த படம் எது? அதில் கதாநாயகியாக நடித்தவர் யார், இயக்கியவர் யார்? (பி.பி.சரவணன், காஞ்சிபுரம்)

‘சண்டக்கோழி!’ இந்த படத்தில் விஷால் ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து இருந்தார். லிங்குசாமி இயக்கியிருந்தார்!

***

மறைந்த டைரக்டர்–தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இயக்கத்தில், அதிக படங்களில் நடித்த கதாநாயகன் யார்? (வி.கணேசன், வள்ளியூர்)

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, விவாகரத்து செய்த அமலாபால் இப்போது எப்படியிருக்கிறார்? (ஆர்.சவுந்தரபாண்டியன், மதுரை)

அமலாபால், கட்டுப்பாடு இல்லாத சுதந்திர பறவையாக வாழ ஆசைப்பட்டார். விவாகரத்துக்குப்பின், அது கிடைத்த சந்தோ‌ஷத்தில், உற்சாகமாக காணப்படுகிறார்!

***

ஸ்ரீதிவ்யாவிடம் போய், ‘‘ஐ லவ் யூ’’ சொன்னால், அதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? (ஜி.முரளிதரன், சின்ன சேலம்)

‘‘ரொம்ப நன்றி’’ என்று இரு கையெடுத்து கும்பிடுவார்!

***