சினிமா செய்திகள்
பாலியல் தொழில் செய்த நடிகைகள் பட்டியல் உள்ளது நடிகை ஸ்ரீரெட்டி புகார்

அமெரிக்காவுக்கு நடிகைகளை அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய கிஷான் மோடுகுமுடி மற்றும் அவரது மனைவி சந்திரகலா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள்.
கிஷான் மோடுகுமுடி தெலுங்கில் படங்கள் தயாரித்துள்ளார்.  நடிகைகளுடன் ஒரு நாள் தங்குவதற்கு 1000 டாலர் முதல் 3 ஆயிரம் டாலர்வரை வசூலித்துள்ளனர்.

போலீசார் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் வீடியோவை கைப்பற்றி உள்ளனர். அதில் இருக்கும் நடிகைகள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரபல தமிழ் நடிகை புகார் அளித்து இருவரையும் சிக்க வைத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தம்பதிகள் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியையும் அமெரிக்காவுக்கு அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறியதாவது:–

 ‘‘மார்க்கெட் இழந்த நடிகைகள் அமெரிக்கா சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். நடிகைகளுக்கு இருக்கும் புகழை வைத்து அவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வித்தியாசப்படும். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரம் என்னிடம் உள்ளது. பிரபல நடிகைகள், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் அடக்கம்.

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை நான் வெளியிட்டால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படும். பாலியல் தொழிலுக்காக என்னையும் அந்த தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை.’’.

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராவ் கூறும்போது, ‘‘கிஷான் பாலியல் தொழில் செய்து வருவது குறித்து ஏற்கனவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர் நடத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தோம். ஆனாலும் தெரியாமல் சிலர் சிக்கி உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வருகிற 24–ந்தேதி தெலுங்கு நடிகர் சங்க அவசரக் கூட்டம் நடக்க உள்ளது.’’ என்றார்.