சினிமா செய்திகள்
3 இடியட்ஸ் படத்தின் 2-ம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளது

சேத்தன் பகத்தின் நாவலை அடிப்படையாகக் கொண்ட 3 இடியட்ஸ் படத்தின் 2-ம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளது. #3Idiots
மும்பை

சேத்தன் பகத்தின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் 3 இடியட்ஸ், பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகும்.இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல், சீனாவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் மிகவும் ரசித்து பார்க்கபட்டது.பசம் வணிக ரீதியில், வெற்றி பெற வில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது, பார்வையாளர்களின் மனதிலும் இதயத்திலும் இது ஏற்படுத்திய  தாக்கத்தை  மறக்க முடியாது. 

 தற்போது ரன்பீர் கபூரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக 'சஞ்சு' என்கிற படத்தை இயக்கிவரும் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்' படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேசமயம் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ள 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கட்டாயம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இதற்கான ஸ்கிரிப்ட்டை எழுத கதாசிரியர் அபிஜீத்துடன் கதைவிவாதம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.