சினிமா செய்திகள்
அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா காதலிக்கிறார் முன்னாள் காதலி தகவல்

விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். குவான்டிகா டி.வி தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமாகி உள்ளார். அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் குவிகின்றன. இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவும் அமெரிக்கா பாப் பாடகரான நிக் ஜோனாசும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாசும் காதலிப்பது உண்மை என்று ஆஸ்திரேலிய பாடகி டெல்டா கூட்ரெம் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

இவர் நிக் ஜோனாஸின் முன்னாள் காதலி ஆவார். இவர்கள் இருவரும் 2011-ல் இருந்து காதலித்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதுகுறித்து பாடகி டெல்டா கூட்ரெம் கூறியதாவது:-

“எனக்கும் நிக் ஜோனாசுக்கும் சில பிரச்சினைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலியா சென்றபோது பேசி சமரசம் செய்து விடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு முன்பே பிரியங்கா சோப்ராவின் காதலில் விழுந்து விட்டார்.”

இவ்வாறு டெல்டா கூட்ரெம் கூறினார்.