சினிமா செய்திகள்
மலையாள பட உலகிலும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை -நடிகை ஹனிரோஸ் புகார்

நடிகைகளுக்கு இயக்குனர் கள், தயாரிப்பாளர்கள், நடிகர் கள் செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
நடிகைகளுக்கு இயக்குனர் கள், தயாரிப்பாளர்கள், நடிகர் கள் செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி படுக்கைக்கு தன்னை அழைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மகளிர் ஆணையமும் அரசும் விசாரணையில் இறங்கி உள்ளன. இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பிரபல நடிகை ஹனிரோஸ் அம்பலப்படுத்தி உள்ளார்.

இவர் காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட சில தமிழில் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒன் பை டூ என்ற மலையாள படத்தில் உதட்டோடு உதடு முத்தமிட்டு நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். செக்ஸ் தொல்லை குறித்து ஹனிரோஸ் அளித்த பேட்டி வருமாறு:-

“மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் நமது கையில்தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலையாள படத்தில் நான் நடித்த முத்த காட்சி படத்தை விளம்பரத்துக்கு பயன் படுத்தியது வேதனையாக இருந்தது.”

இவ்வாறு நடிகை ஹனிரோஸ் கூறினார்.