சினிமா செய்திகள்
லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் சூர்யா சாமி கும்பிட்டார்

ஆந்திராவில் லட்சுமி நரசிம்மசாமிக்கு விசேஷ பூஜை நடத்தி, நடிகர் சூர்யா சாமி கும்பிட்டார்.
கார்த்தி நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘கடைக்குட்டி சிங்கம்.’ இதில், கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்து இருக்கிறார். சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். பாண்டிராஜ் டைரக்டு செய்திருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம், ‘சின்ன பாபு’ என்ற பெயரில், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பாடல்கள் வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக கலையரங்கில் நடந்தது.

அதில் சூர்யா, கார்த்தி இருவரும் கலந்து கொண்டார்கள். விழா முடிந்ததும் இருவரும் ஆந்திராவில் புகழ்பெற்ற சிம்மாசலம் அப்பண்ணா கோவிலுக்கு சென்றார்கள். அங்கு லட்சுமி நரசிம்மசாமிக்கு விசேஷ பூஜை நடத்தி, சாமி கும்பிட்டார்கள்.