சினிமா செய்திகள்
சசிகுமார் நடித்த ‘அசுரவதம்’“படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது”

சசிகுமார் கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘அசுரவதம்.’ இதில் அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்து இருக்கிறார்.
‘அசுரவதம்.’ படத்தை பற்றி கதாநாயகன் சசிகுமார் கூறியதாவது:-

“இந்த படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. திகிலூட்டும் கதையம்சத்துடன், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம். துபாயில் இருந்து சொந்த ஊருக்கும் திரும்பும் ஒரு இளைஞனை பற்றிய கதை. கதைப்படி, என் மனைவியாக நந்திதா நடித்துள்ளார். வசுமித்ரா, வில்லனாக நடித்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு செய்ய, மருது பாண்டியன் டைரக்டு செய்திருக்கிறார். லலித்குமார் தயாரித்துள்ளார்.

கொடைக்கானலில், டிசம்பர் மாத குளிரில் தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தினார்கள். கடுமையான குளிரை தாங்கிக்கொண்டு படக்குழுவினர் அனைவரும் இரவு-பகலாக உழைத்தோம். முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடித்து விட்டோம்.”