சினிமா செய்திகள்
பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார்

பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என நடிகை தீபிகா படுகோனே கூறி உள்ளார்.
மும்பை

பத்மாவத் படம் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் இந்தப் படம் வெளியானது. தீபிகாவுக்கும் இந்தப்படத்தில் நடித்ததற்காக பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. தடைகளை கடந்து இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தீபிகா  தனது  ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என ஆங்கில பத்திரிகைக்கு ஒன்றுக்கு  அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ஈர்க்க முடியும். அதனால் மார்பகங்களை செயற்கையாக பெரிதாக்கிக்கொள்ள சிலர் ஆலோசனைகள் வழங்கினர். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு இது எளிதான வழி என்றனர். ஆனால் நான் அப்படிப்பட்ட நபர் இல்லை, படவாய்ப்புகளுக்காக நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஆரம்ப காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து மீண்டுவிட்டேன். இல்லை என்றால் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.