சினிமா செய்திகள்
விருந்தில் காதலருடன் பிரியங்கா சோப்ரா

35 வயது நிரம்பிய பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் பாடகர் 25 வயது நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.
அமெரிக்காவில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ராவை அழைத்துச் சென்று குடும்பத்தினருக்கு நிக்ஜோனாஸ் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு பிடித்து போனது.

இதுபோல் நிக் ஜோனாசை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார் பிரியங்கா சோப்ரா. அவர்களும் காதலை ஏற்றுக் கொண்டனர். பின்னர் இருவரும் ஜோடியாக கோவா சென்றார்கள். இந்த நிலையில் மும்பையில் அம்பானி வீட்டில் நடந்த அவரது மகன் ஆகாஷ் திருமண நிச்சயதார்த்த விருந்து நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனாசும் ஜோடியாக சென்றனர்.

பிரியங்கா சோப்ரா சிவப்பு நிற சேலை ஜாக்கெட்டும், நிக் ஜோனாஸ் கோட்டு சூட்டும் அணிந்து இருந்தனர். அவர்களை பார்த்ததும் போட்டோகிராபர்கள் படம் பிடித்தனர். இருவரும் போட்டோவுக்கு ஜோடியாக போஸ் கொடுத்துவிட்டு விருந்தில் கலந்துகொண்டனர். பிரியங்கா சோப்ரா–நிக்ஜோனாஸ் திருமணம் அடுத்த மாதம் நடக்கலாம் என்று இந்தி பட உலகில் பேசுகின்றனர்.