சினிமா செய்திகள்
பாடகி எஸ்.ஜானகி பற்றி வதந்தி: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
எஸ்.ஜானகி 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 80 வயது ஆகிறது. மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

3 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல் நிலைகுறித்து அடிக்கடி வதந்திகள் பரவியது. கடந்த வாரம் 3–வது தடவையாக வதந்தி பரப்பப்பட்டது. ‘‘நான் நலமாக இருக்கிறேன். எனது உடல் நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்’’ என்று எஸ்.ஜானகி வேண்டுகோள் விடுத்து வீடியோவில் பேசி வெளியிட்டார்.  இந்த நிலையில் எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மலையாள சினிமா பின்னணி பாடகர்கள் சங்கத்தினர் கேரள போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து வதந்தி பரப்பிய வி‌ஷமிகளை கைது செய்யும்படி சைபர் கிரைம்போலீசுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்னாத் பெஹரா உத்தரவிட்டு உள்ளார்.

சைபர் கிரைம்போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜானகி உடல்நிலை குறித்த வதந்தி தமிழ் நாட்டில் இருந்து பரவியதா? அல்லது ஆந்திரா, கேரளாவில் இருந்து பரப்பப்பட்டதா? என்று விசாரணை நடத்துகின்றனர்.