படமாகும் வாழ்க்கை கதை என்.டி.ராமராவ் மனைவியாக வித்யாபாலன்

என்.டி.ஆர் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்துள்ளனர்.

Update: 2018-07-06 23:00 GMT
மறைந்த ஆந்திர முதல்–மந்திரியும் பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டி.ஆர் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்துள்ளனர். 

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான த டர்டி பிக்சர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. என்.டி.ஆர் வாழ்க்கை கதை படத்தில் தற்போதைய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கதாபாத்திரமும் உள்ளது. இந்த வேடத்தில் ராணா நடிக்கிறார். 

நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவும் நடிகர் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் அவரது மகன் மகேஷ்பாபுவும் நடிக்கின்றனர். என்.டி.ஆர் முதல்வராக இருந்தபோது அவரது குடும்பத்துக்கு மோகன்பாபு நெருக்கமாக இருந்தார். அவருக்கு எம்.பி பதவியும் கிடைத்தது. எனவே என்.டி.ஆர் வாழ்க்கை கதை படத்திலும் மோகன்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். 

இந்த படத்தை கிரிஷ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதுபோல் மறைந்த ஆந்திர முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கையும் படமாகி வருகிறது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். தெலுங்கானா முதல்–மந்திரியாக பதவி வகிக்கும் சந்திரசேகரராவ் வாழ்க்கையும் அவரது வேடத்தில் நாசர் நடிக்க படமாகி வருகிறது.

மேலும் செய்திகள்