சினிமா செய்திகள்
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?நடிகை தபு விளக்கம்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது பற்றி நடிகை தபு பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 46 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார். 

திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இப்போது திருமணம் செய்து கொள்ளாதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கான் காரணம் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். தபு சினிமாவில் அறிமுகமானபோது அஜய் தேவ்கானுடன் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் அஜய் தேவ்கான் நடிகை கஜோலை திருமணம் செய்து கொண்டார். 

இதுகுறித்து தபு கூறியதாவது:–

‘‘நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’

இவ்வாறு தபு கூறியுள்ளார்.