சினிமா செய்திகள்
தம்பிக்கு ஆதரவாக சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகரான சிரஞ்சீவி, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘பிரஜா ராஜ்ஜியம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கணிசமான எம்.எல்.ஏ.க்களைப் பெற்றது. அதன்பிறகு சில மாதங்களில் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துக் கொண்டார் சிரஞ்சீவி. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. தற்போது அவர் அரசியலில் இருந்து விலகி, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் ‘ஜனசேனா’ என்ற கட்சியைத் தொடங்கி, ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.

வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பவன் கல்யாண் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு சிரஞ்சீவி உள்பட பவன்கல்யாண் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

தங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலில் பெரிய அளவில் வளர வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. சிரஞ்சீவியும், தன்னால் எட்டமுடியாத முதல்-அமைச்சர் பதவியை, தனது தம்பியான பவன் கல்யாணுக்குப் பெற்றுத் தந்தே தீருவது என்ற உறுதியுடன் இருக்கிறாராம்.