சினிமா செய்திகள்
பேட்மேன் பற்றிய சில தகவல்கள்

பேட்மேன் திரைப்படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.
பேட்மேன் கதாபாத்திரத்தை பற்றியும், திரைப்படத்தை பற்றியும் சில தகவல்கள் இதோ...

* பேட்மேன் கதாபாத்திரமாக உருமாற இங்கிலாந்தில் ஒரு பட்டப்படிப்பு இருக்கிறது. விக்டோரியா பல்கலைகழகம் வழங்கும் அந்த பட்டப்படிப்பில் பயின்றால் பேட்மேன் என்ற பட்டம் வழங்கப்படுமாம்.

* பேட்மேன் கதாபாத்திரத்தின் திரைப்பட பெயரான புரூஸ் வெயின், இருவேறு வரலாற்று தலைவர்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டது. ஸ்காட்லாந்து மக்களுக்கு பழக்கமான ராபர்ட் புரூஸ் அமெரிக்க புரட்சிக்கு காரணமான ஆண்டனி வெயின் ஆகியோரது பெயர்களின் கலவையில்தான் புரூஸ் வெயின் உருவானது.

* பேட்மேன் திரைப்பட கதை முழுவதுமாக தயாரானதும், ஹெத் லெட்ஜரிடம் கதை சொல்லி பேட்மேனாக நடிக்க சொன்னார்கள். ஆனால் அவர் வேறுசில படங்களில் பிசியாக நடித்ததால், பேட்மேன் கதாபாத்திரம் கிறிஸ்டியன் பேலிடம் சென்றது. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா...? கதாநாயகனாக நடிக்க இருந்த ஹெத் லெட்ஜர் இரண்டாம் பாகத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்தில் வில்லனாக தோன்றி அசத்தியிருந்தார்.

* பேட்மேன் திரைப்படத்தில் காதம் நகரத்தை சுற்றியே கதைகளம் பின்னப்பட்டிருக்கும். அதற்கு திரைக்கதை எழுத்தாளர் பில் பிங்கர்தான் காரணம். ஏனெனில் அவர் கதை எழுதும்போது ஒரு நகரத்தை குறிப்பிட வேண்டியிருந்ததால், அருகில் இருந்த டெலிபோன் நம்பர் புத்தகத்தை திறந்திருக்கிறார். அதில் முதலாவதாக அவர் கண்ணில்பட்டது, காதம் நகரம். அதனால்தான் காதம் பேட்மேனின் கோட்டையாக திகழ்கிறது.