சினிமா செய்திகள்
கேரளாவில், பயணிகளை கவர புது முயற்சி:ஆம்னி பஸ்களில் கவர்ச்சி நடிகைகளின் படங்கள்

ஒரு ஆம்னி பஸ் நிறுவனம் தனது பஸ்களில் படு கவர்ச்சி நடிகைகளின் படங்களை வரைந்து இருக்கிறது.
பொதுவாக ஆம்னி பஸ்களில் கடவுள் படங்கள், இயற்கை எழில்மிகு படங்கள், குழந்தை அல்லது நடிகர்-நடிகைகளின் படங்கள்தான் இடம் பெற்றிருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஒரு ஆம்னி பஸ் நிறுவனம் தனது பஸ்களில் படு கவர்ச்சி நடிகைகளின் படங்களை வரைந்து இருக்கிறது. இந்த பஸ்களுக்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் மவுசு ஏற்பட்டு இருக்கிறது.

உலக அளவில் ‘செக்ஸ் பாம்’ என்று வர்ணிக்கப்படும் மியா கலிபா, இந்தியாவின் கவர்ச்சி புயல் என்றழைக்கப்படும் சன்னி லியோன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கவர்ச்சி கன்னி ஆவா ஆடம்ஸ், கவர்ச்சி பட நாயகன் ஜானி சின்ஸ் உள்ளிட்டோரின் படங்களை அம்பாடி என்பவர் தனக்கு சொந்தமான நிறுவனத்தில் உள்ள ஆம்னி பஸ்களில் வரைந்திருக்கிறார்.

இதனால் கேரளாவில் இவரது பஸ்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. இந்த பஸ்சில் செல்ல இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால், முன்பதிவு இல்லாமல் பஸ்சில் போக முடியாது என்ற நிலை நீடிக்கிறது. இளம்பெண்களும் இந்த பஸ்சில் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தனக்கு விருப்பமான கவர்ச்சி நடிகைகளின் பெயர்களை சொல்ல தயங்குவோர் மத்தியில், தனக்கு சொந்தமான பஸ்களில் உலகளவில் கவர்ச்சியில் கலக்கும் நடிகர்-நடிகைகளின் படங்களை வரைந்து அம்பாடி கேரளாவில் பிரபலம் அடைந்து வருகிறார்.