சினிமா செய்திகள்
பிரபல தனியார் தொலைகாட்சி தொடர் இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்

கிள்ளுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுவார் என பிரபல தனியார் தொலைகாட்சி தொடர் இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்

மலையாள சினிமாவில் போத்தன் வாவா, மைபாஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் நிஷா சாரங். கடந்த இரு ஆண்டுகளாக ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் காமெடி தொடரில் நடித்து வருகிறார், இந்நிலையில் இவர் தொலைக்காட்சி இயக்குநர் உன்னிகிருஷ்ணன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இயக்குனர் உன்னிகிருஷ்ணன் படப்பிடிப்பு தளங்களில் வைத்து அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்தார். பலமுறை படுக்கைக்கு அழைத்தார்.

அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது கிள்ளுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுவார். இது குறித்து நான் தொலைக்காட்சி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தும் பலன் இல்லை. குடும்ப சூழ்நிலை கருதி அந்த தொடரில் தொடர்ந்து நடித்து வந்தேன்.

என்னை பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார். இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று திரும்பி வந்தபோது என்னை சின்னத்திரை தொடரில் இருந்து நீக்கியதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்,
மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கமும் உஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது . தொடர்ந்து வாய்ப்பு தருவதாகவும், இயக்குனரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.