சினிமா செய்திகள்
கணவர்–மகளுடன் சல்மான்கானை சந்தித்த நடிகை ரம்பா

தமிழ் பட உலகில் 1990–களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் 100–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரம்பா பெரிய நடிகர்களோடு ஜோடி சேர்ந்தார். 2010–ல் கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து அங்கேயே குடியேறினார்.

இவர்களுக்கு லாண்யா, சாஷா என்ற 2 மகள்கள் உள்ளனர். இப்போது 3–வது தடவையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் தெரிவித்து ரசிகர்களிடம் வாழ்த்தை வேண்டினார். ரம்பாவுக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் நடிக்கவில்லை. டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவருக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளும் வந்தன. கணவருடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டு பிரிந்தார். அவருடைய சகோதரர் மனைவி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கினார். தனது வீட்டில் இருந்து பணம் திருட்டுபோனதாகவும் புகார் எழுப்பினார். இப்போது கணவருடன் கருத்து வேறுபாடு தீர்ந்து கனடாவில் சந்தோ‌ஷமாக குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்தி நடிகர் சல்மான்கான் கலைநிகழ்ச்சிக்காக கனடா சென்று இருக்கிறார். அவரை கணவர் இந்திரன் மற்றும் மகள் லாண்யாவுடன் சென்று ரம்பா சந்தித்தார். அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். அது இப்போது வைரலாகி வருகிறது.