சினிமா செய்திகள்
கமல்ஹாசனுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு?

நடிகர் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பேசும்போது பெண்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி குறிப்பிட்டார்.
நடிகர் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பேசும்போது பெண்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி குறிப்பிட்டார். “ஆணுக்கு சமமாக இருப்பது என்பது ஆணை விட சிறப்பாக இருப்பதில்தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும் தவறுகளை செய்வதால் அவர்களை விட சிறந்தவர்கள் ஆகிவிட முடியாது. உதாரணத்துக்கு சிகரெட் பிடிப்பது. அது உங்களை அவர்களுக்கு சமமாக ஆக்கிவிடாது. அது ஒழுக்ககேடு என்பதை விட ஆரோக்கியத்துக்கு கேடு” என்று கூறினார்.

இதற்கு பதில் அளிப்பதுபோன்று நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“சிகரெட் பிடிப்பதால் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களைப் போலவே அதே விரக்தி காரணமாகத்தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இந்த பழக்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை. ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள்தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம். இது போலியானது”

இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் சொன்னதை புரிந்துகொள்ளாமல் அவருக்கு எதிராக இந்த கருத்தை காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்துள்ளனர். காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாகவும் சிலர் பேசி இருக்கிறார்கள்.