கட்சி கொடியை ஏற்றிவைப்பு போக்குவரத்துக்கு இடையூறு : மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றும் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டார். #Kamalhassan #MakkalNeedhiMaiam

Update: 2018-07-12 11:34 GMT
சென்னை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்று உள்ளது

* மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* பொதுச்செயலாளராக அருணாச்சலம்,  கட்சியின் பொருளாளராக சுரேஷ்  ஆகியோர் நியமனம் செய்யபட்டு உள்ளனர்.

* மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவர்

* ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சிக்காக அலுவலகத்தின்  வெளியே சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு குறித்து செய்தி வெளியானதை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக நடிகர் கமல் மன்னிப்பு கோரினார்.

மேலும் செய்திகள்