‘‘வயதானதும் கதாநாயகிகளை புறக்கணிப்பதா?’’ – மனிஷா கொய்ராலா

மனிஷா கொய்ராலா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

Update: 2018-07-12 22:00 GMT
மறைந்த பிரபல நடிகை நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா  நடித்துள்ள ‘சஞ்சு’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வயதானதும் கதாநாயகிகளை திரையுலகினர் ஒதுக்குவதாக மனிஷா கொய்ராலா கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நடிகர்கள் வயதான பிறகும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். 60 வயதை தாண்டிய பிறகும் பேத்தி வயது பெண்களுடன் ஜோடியாக ஆடிப்பாடுகிறார்கள். இந்திய சினிமாக்களில் மட்டுமே இதனை பார்க்க முடியும். கதாநாயகிகளுக்கு 30 வயது ஆகிவிட்டால் அக்காள், அண்ணி கதாபாத்திரங்களுக்கு இறக்கி விடுகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு என்று புரியவில்லை.

என்னுடன் ஆரம்ப காலத்தில் நடித்த நடிகர்கள் இப்போதும் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அக்காள், அம்மா வேடங்களைத்தான் ஒதுக்குகிறார்கள். கதாநாயகிகளாக 10 வருடங்கள் மட்டுமே இருக்க முடிகிறது. ஏன் இப்படி ஒதுக்குகிறீர்கள் என்று காரணம் கேட்டால் நிறைய புதுமுக கதாநாயகிகள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்று பதில் சொல்கின்றனர்.

வயதானாலும் என்னைப்போன்ற நடிகைகளால் கதாநாயகர்களுக்கு இணையாக சவாலான வேடங்களில் நடிக்க முடியும். கதாநாயகிகளுக்கு அழகு முக்கியம். எப்போதும் தங்களை அழகாக வைத்திருக்க வேண்டும். 27 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் படப்பிடிப்புகளுக்கு முதல் நாள் செல்வதுபோன்ற உணர்வுடனேயே செல்கிறேன். அதனால்தான் புதிய வி‌ஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.’’

இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.

மேலும் செய்திகள்