சினிமா செய்திகள்
திலீப் குமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு

95 வயதான பிரபல இந்தி நடிகர் திலீப்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
திலீப்குமார்  உடல் நிலை குறித்து அப்போது  வதந்திகளும் பரவின. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இப்போது அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் பரவி உள்ளது. எப்போதும் கணவர் திலீப்குமாருடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சாய்ரா பானு இப்போது தனியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதை வருத்தமுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கணவரின் உடல் நிலை குறித்து அவர் கூறும்போது, ரசிகர்கள் நிறைய பேர் திலீப்குமார் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார்கள். அவர் நன்றாக இருக்கிறார். வீட்டில் ஓய்வு எடுக்கிறார். திலீப்குமார் உடல் நலனுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.