மலையாள பட உலகில் மோகன்லாலுக்கு மீண்டும் எதிர்ப்பு

கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்தது சர்ச்சையானது.

Update: 2018-07-13 22:30 GMT
நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் இதனை கண்டித்து  நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

நடிகர் மோகன்லால் கூறும்போது, திலீப்பை மீண்டும் சேர்ப்பது குறித்து பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இருந்தது. அப்போது யாரும் ஆட்சேபிக்கவில்லை. 2 நடிகைகளிடம் இருந்து மட்டுமே ராஜினாமா கடிதங்கள் வந்துள்ளன என்றார். மோகன்லால் கருத்துக்கு மலையாள நடிகைகள் உள்ளிட்ட சினிமா பெண்கள் கூட்டுக்குழு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அந்த குழுவினர் முகநூலில் கூறியிருப்பதாவது:–

‘‘நடிகை கடத்தலில் சிக்கியவர் மீது இப்போதும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதுகுறித்து ஆராயாமல் நடிகர் சங்கத்தில் அவரை சேர்க்க முடிவு செய்தது வருத்தம் அளிக்கிறது. நடிகைகள் ராஜினாமா பற்றி தெரிவித்த கருத்தும் ஏற்புடையதல்ல. 4 நடிகைகளும் ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இ–மெயில் முகவரிக்கு அனுப்பி உள்ளனர்.

திலீப்பை மீண்டும் சேர்ப்பது குறித்த தீர்மானம் பொதுக்குழுவின் நிகழ்ச்சி நிரலில் இருந்ததாக மோகன்லால் கூறியிருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரையில் அந்த வி‌ஷயம் நிகழ்ச்சி நிரலில் இல்லை. மோகன்லால் தெரிவித்துள்ள கருத்துக்கள் சங்கத்தின் மீது எங்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.’’

இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்