சினிமா செய்திகள்
திருமணம் செய்து கொண்ட பெண்ணை மறுபடியும் மணம் புரிந்த வில்லன் நடிகர்

இந்தி பட உலகில் பிரபலங்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
52 வயதான பிரபல வில்லன் நடிகர் மிலின்ட்சோமன், மகள் வயதான அன்கிதா என்பவரை கடந்த ஏப்ரல் 22–ந் தேதி, மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கையை அனுபவித்து வரும் இவர்கள் மீண்டும் உறவினர்கள் முன்னிலையில், ஸ்பெயின் நாட்டில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதுகுறித்து நடிகர் மிலின்ட் சோமன் தன்னுடைய ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

‘‘அடர்ந்த காட்டில் ஒரு நீர்வீழ்ச்சிக்கு முன், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நானும், என் மனைவியும் ஆசைப்பட்டோம். அந்த ஆசை நிறைவேறி விட்டது’’ என்று பதிவு செய்துள்ளார்.