சினிமா செய்திகள்
விளம்பர படத்தில் நடிக்க திஷா பதானிக்கு ரூ.5 கோடி?

இந்தி நடிகைகள் திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.
ஜவுளிக்கடை, நகைக் கடை திறப்பு விழாக்களுக்கு செல்லவும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடவும் பெரிய தொகை கேட்கிறார்கள். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.

பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான எம்.எஸ்.டோனி என்ற படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

இந்தி நடிகர் டைகர் ஷெராப்பும், திஷா பதானியும் பாகி–2 என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். எனவே இருவரையும் எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால் திஷா பதானி அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்து உள்ளது என்கின்றனர்.

சில நொடிகள் வரும் விளம்பரத்துக்கு இவ்வளவு சம்பளமா? என்று ஒரு முழு படத்தில் நடிக்க ரூ.1 கோடி, ரூ.2 கோடி என்று சம்பளம் வாங்கும் தமிழ், தெலுங்கு நடிகைகள் வியக்கிறார்கள்.