சினிமா செய்திகள்
நான் ஒருபோதும், சினிமா உலகில் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை - காத்ரீனா கைப்

நான் ஒருபோதும், சினிமா உலகில் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கூறி உள்ளார்.
மும்பை

இந்தி நடிகை காத்ரீனா கைப். ராஜ்நீதி, ஏக் தா டைகர்,  தூம்3, டைகர் ஜிந்தா ஹை உள்ளிட்ட படங்களின் மூலம் இந்தி திரைப்பட உலகில் புகழின் உச்சிக்கே சென்றார். தற்போது ஷாருக்கானுடன் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார்

அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

”நான் ஒருபோதும், சினிமா உலகில் 100 சதவீதம்  பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. ஏனெனில் திரைப்படத் தொழில் வெகுவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. புதுப்புது ஐடியாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல், நாமும் மாறிக் கொள்ள வேண்டும். அதனால் தான் எனக்கு தற்போது வெற்றிகரமான வாழ்க்கை கிடைத்துள்ளது.

சினிமாவில் கடின உழைப்பை செலுத்துவதுடன், நடிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் நாம் தொடர்ந்து மதிக்கப்படுவோம். புதுப்புது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். நான் சில உண்மை கதைகளில் நடித்துள்ளேன். மனதில் தோன்றியவற்றை செய்துள்ளேன். அதேபோல் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். 

நான் நடிக்கும் ஒரு படம் ஓடாவிட்டால், அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே இதை பாதுகாப்பான வாழ்க்கை என கூறிவிட முடியாது. எனவே நான் திரைத்துறையை பாதுகாப்பான துறை என்று நினைக்கவில்லை. எனவே தான், புதுப்புது கதாபாத்திரங்களில் நடித்து, என்னை தக்க வைக்க முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார் காத்ரீனா கைப்.

காத்ரீனா  கைப் நேற்று தனது  குடும்பத்தினருடன்  இங்கிலாந்தில் தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடினார்.