சினிமா செய்திகள்
கடைக்குட்டி சிங்கம் (சின்னபாபு) தெலுங்கு வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி

கடைக்குட்டி சிங்கம் (சின்னபாபு) தெலுங்கு வெற்றி விழாவிற்காக நடிகர் கார்த்தி ஆட்டோவில் சென்று இறங்கினார்.
ஐதராபாத்

கடைக்குட்டி சிங்கம் தமிழில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் சின்ன பாபு என்ற பெயரில் தயாராகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இதற்கான வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் கார்த்தியும் ஹைதராபாத் சென்று இருந்தார். அப்போது அவருடைய கார் மழையின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் சரியான நேரத்திற்கு விழாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அருகில் இருந்த ஆட்டோவை பிடித்து, விழாவில் கலந்துக் கொள்ள வேகமாக சென்று சரியான நேரத்தில் வாசலில் இறங்கினார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னதாக நடிகர் கார்த்தி, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு மனதார நன்றியை தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

கடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி! #KadaikuttySingam@Suriya_offl@pandiraj_dir@2D_ENTPVTLTDpic.twitter.com/LtqopWe5gd — Actor Karthi (@Karthi_Offl) July 16, 2018