சினிமா செய்திகள்
தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி

தமது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி ஏற்றுக் கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார் என நடிகை ஸ்ரீரெட்டி கூறி உள்ளார். #Srireddy
சென்னை

தென்னிந்திய திரையுலகில் நாளுக்கு நாள் அதிர்வுகளை ஏற்படுத்திவரும், ஸ்ரீ ரெட்டி தமது சொந்த வாழ்க்கையை பற்றி பேட்டியளித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி, விஜயவாடாவை சேர்ந்தவர். மிகவும் பக்தி மிக்க குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ ரெட்டி, முதலில் பியூட்டி பார்லர் வைத்தார். அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், ஸ்ரீ ரெட்டிக்கு ஊடக துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். 

பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு சேர்ந்த ஸ்ரீ ரெட்டி, மூன்று ஆண்டுகள், செய்தி வாசிப்பாளராக இருந்தார்.  ஊடக துறையில் இருக்கும் போது, சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களை தாம் பேட்டி எடுத்துள்ளதாக கூறும் ஸ்ரீ ரெட்டி, அப்போது சூர்யா ரசிகையாக இருந்ததாகவும், இப்போது அஜித் ரசிகையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்கவே, தாம் இவ்வாறு மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி ஏற்றுக் கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார் என, ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், செட்டில் ஆக உள்ளதாக கூறும் ஸ்ரீ ரெட்டி நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரிடம் ஆதரவு கோருவேன் என்று கூறியுள்ளார். 

இதன்மூலம் தெலுங்கு திரையுலகில் கிடைக்காத ஆதரவு, தமக்கு நடிகர் சங்கத்தில் கிடைக்கும் என, நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.