சினிமா செய்திகள்
ரத்த காட்டேரியாக சுனைனா

நடிகை சுனைனா ஒரு திகில் படத்தில் ரத்த காட்டேரியாக நடிக்கிறார்.
‘காதலில் விழுந்தேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சுனைனா. மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, நம்பியார் ஆகியவையும் அவர் நடிப்பில் வந்த முக்கிய படங்கள். அதன்பிறகு அவருக்கு பெரிய படங்கள் அமையவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திகில் படத்தில் இப்போது அறிமுகமாகி இருக்கிறார். 

இதில் சுனைனா ரத்த காட்டேரியாக நடிக்கிறார். அவரது கொடூரமான தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அஸ்வின் ‘டேட்டு’ கலைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘நிலா நிலா ஓடி வா’ என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. 

சமீப காலமாக நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, டாப்சி உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேடி பிடித்து நடிக்கிறார்கள். அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் உள்ளன. பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக வசூலும் ஈட்டுகின்றன. 

எனவேதான் சுனைனாவும் காட்டேரியாக நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமைந்து பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று நம்புகிறார்.