சினிமா செய்திகள்
‘எம்பிரான்’ ‘சஸ்பென்ஸ்’ கலந்த காதல்-திகில் படம்

‘எம்பிரான்’ என்ற படம் சஸ்பென்ஸ் கலந்த காதல்-திகில் திரைப்படமாக தயாராகி வருகிறது.
முன்தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீக்காமன் ஆகிய படங்களை இயக்கியவர், மகிழ்திருமேனி. இவரிடம் உதவி டைரக்டராக இருந்த கிருஷ்ணா பாண்டி, முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். படத்தின் பெயர், ‘எம்பிரான்.’

“இது, சஸ்பென்ஸ் கலந்த காதல்-திகில் படம். காதல் மற்றும் திகில் படங்கள்தான் நம்மை உடனடியாக தொடர்புபடுத்தி பார்க்க வைப்பவை. காதல் என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி. திகில் என்பது ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டும். இந்த அம்சங்கள் ‘சஸ்பென்ஸ்’ உடன் கலக்கும்போது, அது திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையோ அல்லது நாவல் வாசிக்கும் அனுபவத்தையோ கொடுக்கும். டைரக்டர் கிருஷ்ணா பாண்டி மிகவும் திறமையானவர். அவர் கதை சொன்னபோதே எங்களை கவர்ந்து விட்டார்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் பி.பஞ்சவர்ணம். இவருடன் இணைந்து படத்தை தயாரித்து இருப்பவர், வி.சுமலதா.

ரஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி.சந்திரமவுலி, நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.