சினிமா செய்திகள்
வின்சென்ட் செல்வா இயக்கும் ‘வேட்டையன்’

டைரக்டர் வின்சென்ட் செல்வா ‘வேட்டையன்’ என்ற படத்தின் கதை-திரைக்கதை-எழுதி டைரக்டு செய்கிறார்.
பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், யூத், ஜித்தன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வின்சென்ட் செல்வா அடுத்து, ‘வேட்டையன்’ என்ற படத்தின் கதை-திரைக்கதை-எழுதி டைரக்டு செய்கிறார். செல்வபாரதி வசனம் எழுதியிருக்கிறார். எம்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, அச்சு இசையமைக்கிறார். பாலு கே. தயாரிக்கிறார்.

கதை நாயகனாக ஸ்டண்ட் சிவா நடிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் கதாநாயகனாக நடிப்பது, இதுவே முதல் முறை. கதை நாயகிகளாக 2 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். காட்டுக்குள் வசித்து வரும் பழங்குடியை சேர்ந்த கதை நாயகன் ஒரு பிரச்சினைக்காக நகரத்துக்கு வருகிறான். பிரச்சினையை தீர்த்து விட்டு மீண்டும் அவன் காட்டுக்கு செல்வது, கதை.

இதில், ஒரு யானை முக்கிய வேடத்தில் நடிக்கிறது. இந்த யானை ஏற்கனவே ‘தசாவதாரம்’ படத்தில் நடித்துள்ளது. படத்தில் அந்த யானைக்கு, ‘கொம்பன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சாலக்குடி, கொடைக்கானல், பெங்களூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.