சினிமா செய்திகள்
‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் போலீஸ் கமிஷனராக மிஷ்கின்!

‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் போலீஸ் கமிஷனராக மிஷ்கின் நடித்துள்ளார்.
தமிழ்நாடு காவல் துறையின் மீது மெல்லிய அதிருப்தி அலை வீசி வரும் நிலையில், வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறார், ஒரு போலீஸ் கமிஷனர். இது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் கதை. தமிழ்நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கி மக்களின் நன்மதிப்பை பெற அவர் முயற்சிக்கிறார்.

அவர் சில அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதையும் மீறி, அந்த சமயத்தில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் நடக்கிறது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் மிஷ்கின் களத்தில் தானே இறங்குகிறார். கொள்ளையர்களை வெறி கொண்டு துரத்தி பிடிக்கிறார். அவர்களிடம் இருக்கும் பணத்தை கைப்பற்ற போராடுகிறார்.

அப்போது கொள்ளையர்கள் போலீஸ் கமிஷனர் மிஷ்கினையே தாக்கிவிட்டு தப்பி செல்கிறார்கள். அவர்களை மிஷ்கின் மீண்டும் பிடித்தாரா, இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை.