வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் இருக்கும் போட்டோ பல கேள்விகளை எழுப்பியுள்ளது. #ShanmugaPandian #Vijayakanth

Update: 2018-07-26 09:27 GMT
சென்னை

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன். சண்முகப்பாண்டியன் சகாப்தம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மூன்றாவதாக கேப்டன் விஜயகாந்துடன் "தமிழன் என்று சொல்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய...."என்று இடைவெளி விட்டு ஸ்மைலி போட்டுள்ளார்.

பெயரும் இல்லை, யார் என்றும் கூறவில்லை சூசகமாக ஏதோ சொல்ல வருகிறார் என எண்ணிய நெட்டிசன்கள், பல்வேறு விளக்கங்களை கேட்டு வருகிறார்கள்.

புகைப்படத்தில் இருக்கும் பெண் நெதர்லாந்தை சேர்ந்தவர்  சண்முக பாண்டியனின் தோழி ஆவார் .  அந்த  பெண்ணுக்கு பிறந்த நாள் என்பதால் இருவரும் நெருக்கமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு சண்முக பாண்டியன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்