சினிமா செய்திகள்
தீபிகா படுகோனேவுக்கு திருமண ஏற்பாடுகள்

தீபிகா படுகோனேவும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர்.
எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய பத்மாவத் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் இதற்கான பணியை ஒப்படைத்து உள்ளனர். அழைப்பிதழ் அச்சடித்தல், திருமணத்துக்கு அழைக்க வேண்டியவர்கள் பட்டியல் தயாரித்தல்.

வரவேற்புகளை கவனித்தல், ஓட்டலில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் என்று ஒவ்வொரு பணிக்கும் ஆட்களை நியமிக்கும் வேலை நடக்கிறது.

திருமணத்தை இத்தாலியில் நடத்துகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அங்குதான் திருமணம் நடந்தது.

இயற்கை அழகு சூழ்ந்த பகுதிக்கு நடுவில் உள்ள ஓட்டலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதே ஓட்டலில் தீபிகா படுகோனே திருமணமும் நடக்க உள்ளது.

மும்பையில் இருந்து உறவினர்களையும் நண்பர்களையும் விசே‌ஷ விமானத்தில் இத்தாலிக்கு அழைத்து செல்கிறார்கள். திருமணத்துக்காக இருவரும் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்து விட்டு சில மாதங்கள் படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கின்றனர்.

படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்.