சினிமா செய்திகள்
லாரன்ஸ் சவால், அவர் போல் ஸ்டைல் காட்டி வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக அவர் போல் ஸ்டைல் காட்டி புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence
சென்னை

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்  ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் அதற்கு ஸ்ரீரெட்டி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் தனது அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருவதாக லாரன்ஸ் கூறியிருந்தார். 

லாரன்ஸின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது லாரன்ஸ் மாஸ்டருக்காக என்று அந்த வீடியோவுக்கு மேலே குறிப்பிட்டிருக்கிறார். அதில் லாரன்ஸ் போல் ஸ்டைல் காட்டி உள்ளார்.