சினிமா செய்திகள்
பாடகி விபத்தில் பலி

மலையாள சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா மோகன்தாஸ் விபத்தில் பலியானார்.
மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சினிமா பின்னணி பாடகியானவர் மஞ்சுஷா மோகன்தாஸ். சிறந்த பாடகிக்கான பரிசுகளும் பெற்று இருக்கிறார். மலையாள பட உலகிலும் பிரபலமானவராக இருந்தார். கொச்சி அருகே உள்ள பாவூர் பகுதியில் வசித்து வந்த இவர் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

மஞ்சுஷா, தனது தோழி அஞ்சனாவுடன் கேரளாவில் உள்ள தனிப்புழா என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரில் வந்த வேன் அவர்கள் மீது மோதியது. இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சுஷா மோகன்தாஸ் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

அங்கு  சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26. மஞ்சுஷா மோகன்தாஸ் சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண்குழந்தை உள்ளது.