சினிமா செய்திகள்
கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

ஷாருக்கான் தனது மகள் சுகானா கானை கதாநாயகியாக அறிமுகப்படுத்த கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தி நடிகர் ஷாருக்கான் மகள் சுகானா கானுக்கு 18 வயது ஆகிறது. லண்டனில் படித்து வருகிறார். இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இப்போது கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய அவரது புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனக்கு நடனம் ஆடுவது பிடிக்கும். பெற்றோர்கள் எனது திறமையை உணர்ந்து அதை வெளிக்கொண்டு வந்தார்கள். 16 வயதிலேயே குடும்பத்தினரை விட்டு படிப்புக்காக பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதில் நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன். 

மும்பையில் என்னால் சாதாரணமாக வெளியே சுற்ற முடியவில்லை. ஷாருக்கான் மகள் என்று கண்டுபிடித்து விடுகின்றனர். ஷாருக்கான் மகளாக இருப்பது கஷ்டம். ஆனால் வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்க முடிகிறது என்றார்.

சுகானா கானுக்கு நடிக்க ஆசை இருப்பதாகவும் விரைவில் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.