சினிமா செய்திகள்
அதர்வாவின் `குருதி ஆட்டம்'

`குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.
கடந்த வருடம் (2017) வெளிவந்த படங்களில், பெரிதும் பாராட்டப்பட்ட படம், `8 தோட்டாக்கள்.' இந்த படத்தின் டைரக்டர் ஸ்ரீகணேஷ். இவருடைய அடுத்த படத்துக்கு, `குருதி ஆட்டம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இது, முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் நடக்கும் கதையம்சம் கொண்ட படம். வியாபார ரீதியிலான திகில் படம், இது. அதர்வாவின் திறமைக்கு தீனி போடும் படமாக இருக்கும். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும்.