சினிமா செய்திகள்
எப்போதும் அழகாக இருக்க ராதிகா ஆப்தே சொல்லும் ரகசியம்

எப்போதும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு ராதிகா ஆப்தே சில ஆலோசனைகள் சொல்லி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:–
‘‘அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடம்பில் இருக்கிற அசுத்தங்கள் போய்விடும். உங்கள் மேனி மின்னும். தூக்கம் முக்கியம். ஏழெட்டு மணி நேரம் கண்டிப்பாக தூங்கிப் பாருங்கள். அந்த ஓய்வு இல்லை என்றால் எப்போதும் சோர்வாக இருப்பது மாதிரி தெரியும்.

ஒரு தடவை கண்ணாடி முன்னால் நின்று உங்கள் சிகை அலங்காரத்தை பார்த்துக்கொள்ளுங்கள். எப்போதும் ஒரே மாதிரி முடி இருந்தால் சிகை அலங்காரம் செய்பவரிடம் சென்று இளைமையாக இருப்பது மாதிரி முடியை மாற்றச் சொல்லுங்கள். அவர்கள் புதிய தோற்றத்தில் உங்கள் வயதை சில ஆண்டுகளாவது பின்னோக்கி தள்ளிவிட்டு விடுவார்கள்.

உங்கள் உதடுகளில் பூசும் ‘லிப்ஸ்டிக்’ நிறம்கூட வயதை அதிகமாக காட்டும் ஆபத்து இருக்கிறது. அதனால் ‘பிரவுன் கலர்’ உபயோகிக்காதீர்கள். பிங்க் கலர் பயன்படுத்துங்கள். கண் மேக்கப் கூட ரொம்ப முக்கியம். உங்கள் புருவங்களுக்கு அதிகமாக ‘அவுட்லைன்’ கொடுக்காதீர்கள். எளிமையாக செய்து கொள்ளுங்கள். உங்களுக்கே அந்த வித்தியாசம் தெரியும்.

‘ரவுண்ட் நெக்’ ஜாக்கெட் உங்கள் வயதை அதிகமாக காட்டலாம். அதனால் ஜாக்கெட்டுக்கு ‘வி நெக்’ அல்லது சதுரமாக உள்ள மாதிரி மாடலாக ஜாக்கெட் தைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நடக்கிற, நிக்கிற விதம் ரொம்ப முக்கியம். தோள்களை முன்னோக்கி வளைத்து தலையை பூமியை நோக்கி வைத்துக்கொண்டு நடப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எப்போதும் தன்னம்பிக்கையோடு உடலை நேராக நிறுத்தி நடந்து பாருங்கள். இதனால் நீங்கள் கொஞ்சம் குண்டாய் இருந்தால்கூட மெலிவாக தெரியும்.’’

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.