30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகும் நடிகைகளில் சிலர் 20 அல்லது 25 வயதில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

Update: 2018-08-10 23:45 GMT
நடிகைகளில் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடிக்க வருகிறார்கள். மற்றவர்கள் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு ஐக்கியம் ஆகி விடுகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். நயன்தாரா, 33 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் அடுத்தடுத்து காதல்வயப்பட்டு தோல்வியை தழுவியவர். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுகிறார்.

நயன்தாராவுக்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. இப்போது திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் திருமணத்தை தள்ளிப்போடுகிறார் என்கின்றனர். இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. இவரும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக பேசினார்கள். அதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. வயதாகி விட்டதால் 40 வயதுக்கு மேற்பட்ட வரன்களே அவருக்கு அமைகின்றன என்கின்றனர்.

திரிஷாவுக்கு 35 வயது ஆகிறது. பொருத்தமான மாப்பிள்ளை அமையும்போது திருமணம் செய்துகொள்வேன் என்று தள்ளிப்போட்டு வருகிறார். காஜல் அகர்வாலுக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு ஒரு தொழில் அதிபருடன் திருமணம் நடக்கப்போகிறது என்றனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தவில்லை. இப்போது அவர் கைவசம் பாரிஸ் பாரிஸ் என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை முடித்ததும் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

33 வயதாகும் சதா, 30 வயதை தாண்டிய அஞ்சலி, 31 வயதாகும் ரம்யா நம்பீசன், 31 வயதான டாப்சி உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்