சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டதில் நடிகை அமலா பாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டுள்ளது.

Update: 2018-08-14 08:31 GMT
அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வரும் 'அதோ அந்த பறவை போல' படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அமலாபாலுக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளன. இந்நிலையில் சண்டைக் காட்சியில் நடித்தபோது அமலா பாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டுள்ளது.

இருப்பினும் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த அமலாபால் வலி அதிகமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கையின் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமலா பாலை நன்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

'அதோ அந்த பறவை போல' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நடிகை அமலா பாலுக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்