சினிமா செய்திகள்
அதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை

அதிகமான போதையால் நடிகை ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் நடித்தும் அமெரிக்காவில் பிரபலமானவர் லிரிக் மெக்கென்ரி. இவரது தந்தை ஹாலிவுட் படங்கள் டைரக்டு செய்துள்ளார். அவருடன் இணைந்து லிரிக் மெக்கென்ரியும் படங்கள் தயாரித்து இருக்கிறார். தனது 26 வயது பிறந்த நாளையொட்டி நியூயார்க்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுக்கு லிரிக் மெக்கென்ரி மதுவிருந்து கொடுத்தார். 

இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நியூயார்க் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தது லிரிக் மெக்கென்ரி என்பது தெரியவந்தது. 

பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து போதையில் இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோக்கைன் என்ற போதை மருந்தையும் அவர் சாப்பிட்டு இருப்பதாக கூறினர். லிரிக் மெக்கென்ரி மரணம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.