சினிமா செய்திகள்
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்போம்: நடிகை சாய்பல்லவி

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்போம் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

கேரளா கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. 

மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரள திரைப்பிரபலங்கள் டுவிட்டர் மூலமாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிவின் பாலி உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
Heartbreaking to see our families in Kerala go through so much distress.
Let us extend our fullest support and Pray for the safety and well being of all affected by the floods #KeralaFloods — Sai Pallavi (@Sai_Pallavi92) August 16, 2018

இந்த நிலையில், பிரேமம் என்ற மலையாள  படம் மூலம் புகழின் உச்சத்தை எட்டிய  நடிகை சாய் பல்லவி, டுவிட்டரில் கேரள வெள்ளம் பற்றி தனது வேதனையை பதிவு செய்துள்ளார். 

சாய் பல்லவி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ கடினமான காலகட்டத்தில் கேரளாவில் உள்ள நமது குடும்பத்தினர் சிக்கியிருப்பதை பார்ப்பது மிகுந்த மன வேதனையை தருகிறது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலமுடன் இருக்க நமது முழு ஆதரவுக்கரத்தையும் நீட்டுவோம். நலமுடன் இருக்க பிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.