சினிமா செய்திகள்
கேரளாவுக்கு தனுஷ், விஜய்சேதுபதி நிதி உதவி

கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.25 லட்சமும், நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும் வழங்கியுள்ளார்கள்.
கேரள வெள்ள சேதத்துக்கு தமிழ் நடிகர்கள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் நிதி வழங்கி உள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் நிதி வழங்கி இருக்கிறார். நடிகர் சங்கமும் நிதி உதவி அளித்துள்ளது. தெலுங்கு நடிகர்களும் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். 

இப்போது நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளார். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சமும் வழங்கி உள்ளனர். சித்தார்த் நிதி வழங்கிய தகவலை டுவிட்டரில் அறிவித்து கிகி நடனத்தைபோல் புதிய சவாலையும் கேரளாவுக்காக ஆரம்பித்துள்ளார். கேரளாவுக்கு நன்கொடை அனுப்பும் எனது சவாலை ஏற்று வெள்ள நிவாரணத்துக்கு நிதி உதவிகள் வழங்க தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

கேரளாவில் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் சில தொடர்பு எண்களையும் வெளியிட்டு உள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எஸ்.டி.டி கோடு நம்பர்களை நடிகர் மோகன்லால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதையும் சித்தார்த் பகிர்ந்துள்ளார்.